spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

மழை

we-r-hiring

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று (நவ.15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நவம்பர் 14- ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து. இன்று (நவ.15) காலை 08.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16- ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுகளில் நவம்பர் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது நவம்பர் 18- ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா- மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.

இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு இறுதிச் சடங்கு!

இதன் காரணமாக, இன்று (நவ.15) கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ