Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

-

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தநிலையில் மாலையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் கோடை மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ