spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பள்ளிகளில் 'மகிழ் முற்றம்' திட்டம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசு பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ திட்டம் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

-

- Advertisement -
kadalkanni

அரசு பள்ளிகளில் ஹவுஸ் சிஸ்டத்தை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் ‘மகிழ் முற்றம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவத்துள்ளார்.

அரசு பள்ளிகளில் 'மகிழ் முற்றம்' திட்டம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

2024 – 2025-ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது “மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, ‘மகிழ் முற்றம்’ திட்டம் செயல்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதனைச் செயல்படுத்தும் விதமாக உலக குழந்தைகள் தினமான இன்று சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் திட்டத்திற்கான இலச்சினையை(Logo) வெளியிட்டு, கையேட்டினை வழங்கித் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்சியில் அவர் பேசியபோது,

‘மகிழ் முற்றம்’ திட்டம் இன்று உலக குழந்தைகள் தினத்தில் இதனை ஆரம்பித்திருக்கிறோம்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கும் பொழுது முதலமைச்சர் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். அவ்வாறு நான் நேரில் பார்வையிட்ட பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்று.

இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த மகிழ் முற்றம், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்திணைகளை குறிக்கும் விதமாக ஐந்து ஹவுஸ்கேப்டன்களும் மாணவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும்.

வீட்டில், பள்ளியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த மாநிலமே மகிழ் முற்றமாக இருக்க வேண்டும் என நினைப்பவர் முதலமைச்சர். பெரியார், அம்பேத்கர் பிறந்த தினங்கள் மட்டுமல்லாது, வருடத்தில் 365 நாட்களையுமே சமத்துவ நாள், சமூக நீதி நாளாக கொண்டாட வேண்டும் என எண்ணக் கூடியவர் நம் முதலமைச்சர்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த மகிழ் முற்றம் இருக்கப் போகிறது. மாதிரி சட்டமன்ற, மாதிரி நாடாளுமன்றம் என வரும்போது மாணவர்களுக்கு இப்போதே தெரிய வேண்டும் அரசியல்வாதி என்பவர் யார்? அவர்களுடைய வேலை என்ன, நாம் வாக்களிக்கின்றோமே, அவர்களிடம் நாம் என்ன கேள்வி கேட்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அந்த அறியாமையை நீக்கி, மாணவர்கள் அனைத்தும் அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் இந்த மகிழ் முற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மட்டும் தான் இருக்க வேண்டுமா, அரசு குழுவில் இருக்க கூடாதா என்று யோசித்ததன் விளைவு தான் இந்த மகிழ் முற்றம். இது மாணவர்கள் மனதில் உளவியல் ரீதியான ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

கானா பாடலின் தந்தை, தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று!

MUST READ