spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் அறிவுத்தலின் படி சிவாவை சந்தித்தேன்- கே.என்.நேரு

முதல்வர் அறிவுத்தலின் படி சிவாவை சந்தித்தேன்- கே.என்.நேரு

-

- Advertisement -

முதல்வர் அறிவுத்தலின் படி சிவாவை சந்தித்தேன்- கே.என்.நேரு

தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Image

திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை சென்றபோது திருச்சி சிவாவை திருச்சி மாவட்ட திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என் நேருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவருக்கு கருப்பு கொடி காட்டினர்.

we-r-hiring

இது தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பியவர்களை செசன்ஸ் கோர்ட் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென காவல் நிலையத்திற்குச் சென்ற திமுகவை சேர்ந்த காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ் துரைராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கருப்புக் கொடி காட்டியவர்களை காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கினார்.

இந்நிலையில் திருச்சி சிவாவை, அவரது இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்த கே.என்.நேரு, “கட்சி நிர்வாகிக்கு நடக்கக்கூடாத விஷயம் நடந்துவிட்டது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி சிவாவை நேரில் சந்தித்துள்ளேன். திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல்வர் அறிவுறுத்தினார். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. மனம் விட்டு நானும் சிவாவும் பேசினோம்” என்றார்.

MUST READ