spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலையில் தமிழ் வழிப்பாடப்பிரிவுகள் மூடப்படாது- பொன்முடி

அண்ணா பல்கலையில் தமிழ் வழிப்பாடப்பிரிவுகள் மூடப்படாது- பொன்முடி

-

- Advertisement -

அண்ணா பல்கலையில் தமிழ் வழிப்பாடப்பிரிவுகள் மூடப்படாது- பொன்முடி

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

ponmudi minister

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ரோஸிமின் திலகர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடங்களை நிறுத்தி வைக்கும் முடிவு குறித்து எனக்கோ, உயர்கல்வித்துறை செயலாளருக்கு பல்கலை தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழ் வழி பாடங்களை உறுப்புக் கல்லூரிகளில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது.

Anna University, Chennai -An Overview

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும்” என்றார்.

MUST READ