spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி - தமிழக அரசு

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – தமிழக அரசு

-

- Advertisement -
kadalkanni

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு அமைச்சர் சேகர்பாபு நிதியுதவி வழங்கினார்

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி யானை உயிரிழந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதி உதவி அளித்து உதயகுமாரின் மனைவிக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்தனர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி இந்த தெய்வானை யானையினால் பாகன் உதயகுமார் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பலியான யானைப்பாகன் உதயகுமார் மற்றும் அவரின் உறவினர் சிசுபாலன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்,

அதனைத் தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூருக்கு வருகை தந்து பலியான உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ள 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இரண்டு குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கினார்.

மேலும் கோயில் பணியாளரான யானை பாகன் உதயகுமாருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் காசோலையும், மேலும் கோவில் தக்கார் அருள் முருகன் சார்பில் மூன்று லட்ச ரூபாய் என பத்து லட்ச ரூபாய் நிதி உதவி அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். மேலும் உதயகுமாரின் மனைவிக்கு கோவிலில் கல்வித்தகுதி ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இதுபோல் பலியான மற்றொரு நபரான சிசுபாலன் குடும்பத்தினருக்கு தமிழகம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாயும் கோவில் தக்கார் அருள் முருகன் சார்பில் மூன்று லட்ச ரூபாய் என மொத்தம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

இந்த நிலையில் திருச்செந்தூரில் தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்கம் சார்பில் அந்த சங்கத்தின் திருச்செந்தூர் கிளை தலைவர் பால்ராஜ்
செயலாளர் நெல்லையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது யானை தாக்கி உயிரிழந்த திருக்கோவில் பணியாளர் யானைப்பாகன் உதயகுமாரின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாயும் அதுபோல் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி.மேலும் உடன் பலியான சிசு பாலன் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்துள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் தமிழக அரசிற்கும் இந்து சமய அறநிலைத்துறைக்கும் பணியாளர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளனர்.

நான் பிறந்த மண்ணுக்கு நன்றி …. அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!

MUST READ