Homeசெய்திகள்தமிழ்நாடுகைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்.... அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!

கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்…. அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!

-

 

கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்.... அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!
File Photo

17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நள்ளிரவில் அமைச்சரை கைது செய்து துன்புறுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது- வைகோ

இந்த நிலையில், மருத்துவமனையைச் சுற்றி மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், ரகுபதி, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதா ஜீவன், துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதேபோல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி கைது- அடுத்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைதுச் செய்யப்பட்டத் தகவலை தமிழக சட்டப்பேரவைச் செயலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வழக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சட்டப்பேரவைச் செயலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். சட்டப்பேரவைச் செயலகத்தில் தெரிவிக்கப்பட்டத் தகவல்கள் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்த பின் தமிழக அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நிர்வாக வசதிக்காக செந்தில் பாலாஜி வசமுள்ளத் துறைகளைக் கவனிக்கும் பொறுப்பு மாற்றப்பட உள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதாக மத்திய அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ