Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின் 7, 6 தேதிகளில் குமரிக்கு சுற்றுப்பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 7, 6 தேதிகளில் குமரிக்கு சுற்றுப்பயணம்

-

முதல்வர் மு.க.ஸ்டாலின் 7,6 தேதிகளில் குமரிக்கு சுற்றுப்பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இம்மாதம் 6ம் தேதி மாலை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் தோல் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு நாகர்கோவில் தங்கும் அவர், மறுநாள் 7 ம் தேதி காலை நாகர்கோவிலில் 10 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் அவர் அங்கிருந்து நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திரு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையைத் தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகள் நடைபெறும் நாகராஜா திடல் மாநகராட்சி அலுவலகம், திமுக அலுவலகம் ஆகிய இடங்களை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் முதலமைச்சர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

MUST READ