நானும் டெல்டாகாரன் தான்; நிலக்கரி திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்- மு.க.ஸ்டாலின்
நிலக்கரி சுரங்கம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசின் அறிவிப்பு அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.. நிலக்கரி சுரங்க திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு உரிய மதிப்பு அளிப்போம் என ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை அறிந்ததும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். நிலக்கரி சுரங்கம் தொடர்பாக உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். எனது கடிதத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கடிதத்துக்கு உரிய மதிப்பு அளிப்போம், கவலைப்பட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
நானும் டெல்டாகாரன் தான். ஒருபோதும் நிலக்கரி திட்டத்தை அனுமதிக்கமாட்டேன். எந்த காரணத்தை கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது” என்றார்.