காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை அடுத்து, 4 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில்.தமிழகத்திற்கு கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. முதலில் திருவள்ளூரிலும் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அவருக்கு சி.பி.சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சசிகாந்த் செந்திலிடம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினார். அதேபோல இன்று மாலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மருத்துவமனையில் அவரை சந்தித்து சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வந்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அமைச்சர் சேகர் பாபு, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,” நமக்கான நிதியை தான் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது தமிழ்நாட்டு மக்கள் மீதும் அக்கரை இல்லாத அரசாக மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிச்சயம் தமிழக முதலமைச்சர் தலைமையில் நமக்கான உரிமைகளை மீட்போம். நமக்கான உரிமைகளை பெறுவதற்கான பல வழிகள் இருக்கிறது.ஆகையால் சசிகாந்த் செந்தில் அவர்களின் உண்ணாவிராத போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் என் மூலமாக தெரிவித்தார்.அதற்காகத்தான் அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளாா்.”
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சசிகாந்த் செந்திலை சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்த ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து, காங்கிரஸ் மேலிடம் கைவிட வேண்டும் என்று தங்களிடம் சொல்லி அனுப்பியதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பழச்சாறு அருந்தி தன்னுடைய நான்கு நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை , தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சசிகாந் செந்திலின் உடல்நலம் கருதி இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் , காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான மேலிட பொறுப்பாளர், கிரீஷ் ஜோடங்கர் உள்ளிட்ட தலைவர்கள் அவரை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தோம் போராட்டம் நடத்த பல்வேறு வழிகள் உள்ளதாகவும் உடல் நலம் கருதி இந்த போராட்டத்தை கைவிடுமாறு நாங்கள் அறிவித்தோம் அதை ஏற்றுக் கொண்ட அவர் பழச்சாறு அருந்தி தற்போது தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பேசுகையில் , ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமைகளை மீட்பதற்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளேன். மாணவர்கள் போராட முடியாததால் நான் அவர்களுக்காக போராடுகிறேன் இது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் தொடர்ந்தேன் தொடர்ச்சியாக எனது போராட்டம் தொடரும், தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக சசிகாந்த செந்தில் தெரிவித்தார்.”
காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஜோடங்கர் பேசுகையில் , ”குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் வஞ்சிப்பதாகவும், தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வியை வருவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக போராட்டத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.”
விஜய்க்கு இலங்கை அரசு தடை! கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றம்! உமாபதி நேர்காணல்!