Homeசெய்திகள்தமிழ்நாடுதேனி பெரியகுளத்தில் மதுபானக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல்

தேனி பெரியகுளத்தில் மதுபானக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல்

-

- Advertisement -

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக தேனி – திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

தேனி பெரியகுளத்தில் மதுபானக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல்தேனி மாவட்டம் பெரியகுளம்  வடகரை, தென்கரை மற்றும் வடுகபட்டி சாலை பகுதியில் பாருடன் கூடிய அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இவைகள்  அனைத்தும் பேருந்து நிலையம் எதிரே, பேருந்து நிறுத்தம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில்  செயல்பட்டு வருவதாகவும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும்.

எனவே இந்த மதுகடைகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து நிரந்தரமாக மூடக் கோரியும் தேனி திண்டுக்கல்  நெடுஞ்சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தேனி திண்டுக்கல் சாலையில்  போக்குவரத்து தடைபட்டு, பேருந்து நிலையத்திற்கு எந்த பேருந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் காவல்துறையினர் போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்தனர். பின்னர், பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்  நல்லு, பெரியகுளம் வட்டாட்சியர் மருதுபாண்டி, உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

MUST READ