- Advertisement -
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 100க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ மணிக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் குழுவினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து படையலிட்டு பொங்கலோ பொங்கல் என கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.