தனிப்பட்ட முறையில் உண்ணாவிரதம் இருந்து உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்திலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து நலம் விசாரித்ததார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ”ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்தும் தமிழகத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நான்காவது நாளாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஒன்றியத்தில் இருக்கும் மோடியின் ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல. மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க கூடிய ஆட்சி அல்ல. ஒரு பாசிச அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் தான் ஒரு தீர்வு கிடைக்கும். தனிப்பட்ட முறையில் உண்ணாவிரதம் இருந்து தனது உடலை வருத்திக் கொண்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டாம் அதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

மதியம் 2 மணிக்குள்ளாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் அதுதான் நல்லது உங்களுக்கு, மட்டுமல்ல மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் அதனால் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளோம்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தவிர அனைத்து கட்சிகளும் எடப்பாடி பழனிச்சாமி கூட இந்த கல்வி நிதி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மும்மொழி கொள்கை ஏற்க வேண்டும் என்பது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.
மேலும், நல்லக்கண்ணு அவர்கள் படிப்படியாக உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் நல்ல வகையில் குணமடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்ந்து கொண்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் வரிவிதிப்பு அறிவித்திருப்பதற்கு காரணமாக தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சுங்க கட்டண உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது என முத்தரசன் கூறினார்.
பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!