நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதால் நெல்லை மேயர் சரவணனின் பதவி தப்பியது.
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் வாக்கெடுப்பு நடக்கவிருந்தது. மாமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வரவில்லை என்பதால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தீர்மானத்தில் பங்கேற்கக் கூடாது என என்பதால், மாமன்ற உறுப்பினர்கள் மதுரை, நெல்லை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு குறைந்தபட்சம் 44 மாமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதால் இனி ஒரு ஆண்டுக்கு தீர்மானம் கொண்டு வர முடியாது என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் நெல்லை மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றதில் இருந்து மாமன்ற உறுப்பினர்கள், மேயர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேயர் மீது ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.