Homeசெய்திகள்ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வு

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வு

-

- Advertisement -
kadalkanni

 

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வு

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

வார இறுதி , பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அதேபோல பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வரத் தொடங்குவர்.

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் – ஆ.ராசா

ரயில் ,பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்தை நாடுகின்றனர்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை,குமரிக்கு செல்வதற்கான கட்டணம் 2 மடங்காக உயர்ந்துள்ளது என பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.தொடர் விடுமுறை நாட்கள் என்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ