spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் - ஆ.ராசா

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் – ஆ.ராசா

-

- Advertisement -
kadalkanni

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை தற்போது அந்த சாசனத்தையே முத்தமிட வைத்துள்ளது திமுக கூட்டணி என அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் - ஆ.ராசா

நீலகிரி தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளைப் போல மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசால் தற்போது கொண்டு வர முடியாது என்றும் விமர்சித்தார்.

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் - ஆ.ராசா

தொடர்ந்து பேசிய அவர், எந்த மோடி இந்த அரசியல் சட்டத்தை மாற்றிவிட்டு இது ஒரு மதத்திற்கான நாடு, இந்த நாட்டில் ஒரே மொழி இந்தி மொழி தான் இருக்க வேண்டும் என்றும் ஒரே தேர்தல் தான் நடக்க வேண்டும் எனவும் ஒரே உணவு ஒரே உடை தான் இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அது அரசியல் சட்டத்திற்கு பொருந்தாத ஒன்று.

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை (apcnewstamil.com)

பாஜக ஆட்சிக்கு வந்தால் இவைஅனைத்தையும் மாற்றுவோம் என்று சொன்ன அந்த மோடியை அரசியல் சாசனத்தை தூக்கி முத்தம் கொடுக்கிற அளவுக்கு கொண்டு போய்விட்ட கட்சி திராவிட முன்னேற்ற கழகமும் அதன் தலைவரும் தான் என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

MUST READ