spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!

-

- Advertisement -

 

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!

we-r-hiring

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. தி.மு.க எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேரில் சென்று மனு கொடுத்தார்.

ஸ்ரீசேஷாத்ரி மணிமண்டபத்தில் இல.கணேசன் சுவாமி தரிசனம்

டெல்லி ஜெய்ப்பூர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான தி.மு.க.வின் நிலைப்பாட்டையும் தெரிவித்து, மனுவையும் வழங்கினார்.

அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்திய, மாநில அரசுகளின் உறவை பாதிப்பதோடு, ஜனநாயக நடைமுறையை இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை பலவீனப்படுத்தும் என்றும் தி.மு.க. மனுவில் குறிப்பிட்டுள்ளது.

வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி

ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்தை நடை முறை படுத்தினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக்குழு, மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க அதிகாரமில்லை எனவும், அதிகார பசி கொண்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு துணை போகாமல் இதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ