2 நாள் பயணமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா செல்கிறார். அவா் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடுகிறார் என காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது வலைதளப் பக்கத்தில், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி ஏப்ரல் 21-22 என இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், அமெரிக்காவின் ரோட் தீவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் உரையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரோட் தீவிற்கு செல்வதற்கு முன்பு அமெரிக்காவில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்களை ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை