spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

-

- Advertisement -

“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளது!“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசால் சமீபத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு திருத்தப்பட்ட வக்பு சட்டதிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்குகளுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நிற்பதற்கு கூட போதிய இடம் இல்லாமல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (Supreme Court Bar Association) உச்ச நீதிமன்றத்தின் பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நேற்று வக்பு வழக்கு விசாரணையின் போது அதிக அளவு நெரிசல் இருந்ததன் காரணமாக இரண்டு வழக்கறிஞர்கள் மயக்கம் அடைந்ததாகவும், எனவே வக்பு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையின் நேரடி ஒளிபரப்பை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்பு வழக்கு விசாரணை இன்று மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

முழு பூசணிக்காயைக் சோற்றில் மறைக்கும் சபாநாயகர்…… பெ.சண்முகம் பேச்சு

MUST READ