spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

OPS

we-r-hiring

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.

தலைமைச் செயலக உதவியாளர் பணி தேர்வுக்கான இறுதிப் பட்டியல் வெளியிட வேண்டும் – அன்புமணி

கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு வரை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது வருவாயை விட ரூபாய் 1.77 கோடி அளவிலான சொத்து சேர்த்ததாக அவரது மீதும், மகன் ரவீந்திரநாத் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனை நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்றும் (மார்ச் 05), நாளையும் (மார்ச் 06) இறுதி வாதங்களை முன் வைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் மார்ச் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ