
ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிகளில் கல்வி அதிகாரகள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஒன்றியத்தில் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காட்டி முறைகேடு செய்ததை தொடர்ந்து, வட்டாரக்கல்வி அலுவலர் மேரி ஜோசப்பின் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை லதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து – சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வட்டார வளமைய அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைகளுக்கு உட்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் பட்டியலின்படி பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறுகள் மற்றும் முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இயக்குனர் எச்சரித்துள்ளார்.