spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல் ஊற்றி இளம்பெண் கொடூரமாக எரித்துக் கொலை!

பெட்ரோல் ஊற்றி இளம்பெண் கொடூரமாக எரித்துக் கொலை!

-

- Advertisement -

 

பெட்ரோல் ஊற்றி இளம்பெண் கொடூரமாக எரித்துக் கொலை!
Video Crop Image

சென்னையின் புறநகர் பகுதியான பொன்மாரில் ஐ.டி. பெண் ஊழியர், கை, கால்களைக் கட்டப்பட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரை அடுத்த பொன்மார் வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர்கள், இளம்பெண் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இரண்டு பெண் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!

இரண்டு ஆண்டுகளாக கண்ணகி நகரில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காதல் விவகாரத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கொலை தொடர்பாக, வெற்றி என்பவரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ