கோவை மாவட்டம் இருகூர் அருகே அலறல் சத்தத்துடன் , இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, அவ்வழியே வெள்ளை நிற காரில் வந்த சிலர் வலுக்கட்டாயமாக இழுந்த்து, துன்புறுத்தி கடத்திச் சென்றுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் பார்த்து உடனடியாக ‘100’க்கு அழைத்து காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் காவல்துறையினர், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதில் காரில் இருந்து பெண் அலறும் சத்தமும், பின்னர் அந்தக் கார் அங்கிருந்து வேகமாகச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதனையடுத்து போலீஸார் யார் அந்தப்பெண் ? அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அந்தக் கார் எங்கு சென்றது என்கிற பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஏற்கனவே கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத சூழலில் அடுத்ததாக பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெண் கடத்தல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், “ இருகூர் விவகாரத்தில் வெள்ளை கலர் காரில் பெண் ஒருவர் சத்தம் போட்டு சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல்துறையினருக்கு 100க்கு தகவல் அளித்துள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள். அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம்; ஆனால் அதில் வாகன எண் தெளிவாக இல்லை.
அந்த சிசிடிவி காட்சியில் பெண் உள்ளே இருந்ததற்கு எந்த ஒரு பதிவும் தெளிவாக இல்லை. இது சம்பந்தமாக தற்பொழுது வரை புகார் ஏதும் வரவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவரை அடித்து, அலறலுடன் காரில் கடத்திச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பு#kovai #youggirlkidnapped #kidnappingcase #apcnewstamil pic.twitter.com/1JfAQTePEv
— APC NEWS TAMIL (@apc_news_tamil) November 7, 2025



