Homeசெய்திகள்தமிழ்நாடுபொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

பொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

-

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலைச் செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தத் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனு இன்று (செப்.07) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வழக்குப்பதிவுச் செய்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2002- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவுச் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை; போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணைக்கு எடுத்து ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதி விசாரித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விரோதமானது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி என்பதாலும் தாமாக முன்வந்து வழக்கை எடுத்ததாக நீதிபதி விளக்கமளித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதேபோல், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டது தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் செப்டம்பர் 20- ஆம் தேதியும், அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதான மறு ஆய்வு மனு செப்டம்பர் 27- ஆம் தேதியும் விசாரணைக்கு வரவுள்ளது.

MUST READ