spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி!

-

- Advertisement -

 

"அண்ணன் அழகிரி திருமணத்தில் பெரியாருக்கு நான்தான் உணவுப் பரிமாறினேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: DMK

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

மண்டல பூஜையை முன்னிட்டு அதிகரிக்கும் சபரிமலை பக்தர்களின் வருகை!

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் (டிச.24) கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

‘ரயிலில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி வழங்கப்படும்!’

இவ்விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ