spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவத்தலக்குண்டில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம்

வத்தலக்குண்டில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம்

-

- Advertisement -

திமுக அன்பை பெற துடிக்கும் அண்ணாமலை அவதூறு பேச்சை கண்டித்து வத்தலக்குண்டில் அதிமுக சுவரொட்டி சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தை போர் ஏற்பட்டு வருவது தற்போது இரு கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்து போர் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக

we-r-hiring

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி திமுகவின் அன்பை பெற துடிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலில் வத்தலகுண்டுவில் அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இது குறித்து பிஜேபி கட்சியினர் கூறும் போது அண்ணாமலை வெளிநாடு பயணம் செல்வதற்கு அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர் என்று தெரிவித்தனர்.

அதிமுக பாஜக மோதல் அரசியல் கிராமம் வரை வளர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ