
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னரும் விடுதலையான சாந்தனை சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் வைத்திருந்தது பெரும் தவறு என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால் சாந்தன் விடுவிக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (பிப்.28) காலை 07.50 மணிக்கு உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியதாவது, “கடந்த 2022- ஆம் ஆண்டு விடுதலையான 4 பேரும் தங்களுடைய தாயகத்துக்கு திரும்பவில்லை. சிறையில் இருந்து விடுதலை பெற்றாலும் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார்கள். சிறப்பு முகாம் என்ற பெயரில் எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்தில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகிய நான்கு பேரும் அடைக்கப்பட்டனர்.
சாந்தன் தன்னுடைய தாயகத்திற்கு உயிருடன் திரும்ப வேண்டும் என போராடி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அவர் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது. சாந்தனுடைய உடலை ஈழத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அவர்களுடைய உறவினர்கள் இங்கு வந்துள்ளார்கள்.
கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மற்ற மூவரையும் அவரவர் விரும்புகின்ற பகுதிகளில் தங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய வரும் தமிழகத்தில் தங்கள் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்கள். அது போலவே மற்றவர்களையும் உடனடியாக தங்கள் குடும்பத்தினரோடு இருக்க உத்தரவு விட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும் தேச நலன் கருதுகிறோம் என்ற பெயரில் சிறப்பு முகாமில் வைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. மறைந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல, சென்னை காவல்துறை தடையில்லா சான்று வழங்கியுள்ள நிலையில், அதற்கான பணிகளை, அவரது வழக்கறிஞர் புகழேந்தி கவனித்து வருகிறார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை இன்றி இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாந்தன் பாஸ்போர்ட் தொடர்பான ஆவணங்கள், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
இந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்றவுடன் வழக்கறிஞர் புகழேந்தி அவரது பிரேதத்தை பெற்றுக் கொண்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து கார்கோ விமானம் மூலம் அவரது உடலை இலங்கைக்கு எடுத்துச் செல்லவுள்ளார்.” இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.