
கோவை செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தி.மு.க. நேரடியாகப் போட்டியிட்டால் தி.மு.க.வுக்கு ஆதரவுத் தருவேன். பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தி.மு.க. களமிறங்கினால் போட்டியிலிருந்து விலகி கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து நீக்கினால் ஆதரவு தருவேன்.
“ஊழல், ஜாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமில்லை”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தி.மு.க. போட்டியிடாவிட்டால் நானே களமிறங்குவேன். பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தி.மு.க. களமிறங்கினால், அந்த தொகுதியில் மட்டும் ஆதரவு, தி.மு.க.வுடன் கூட்டணியில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க.வின் எஸ்.ஆர்.சேகர், “சீமானின் திடீர் அறிவிப்பு அந்தர் பல்டி. தி.மு.க.வுக்கு சீமான் ஆதரவு தெரிவிப்பதற்கான அழுத்தம் எது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.