நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஸ்டீல் விலையை நிர்ணயிப்பதில் 25 நிறுவனங்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஸ்டீல் விலையை செயற்கையாக உயர்த்தியதாக முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் மீது இந்திய போட்டி ஆணையம் (CCI) மேற்கொண்ட விசாரணையில், பெரும் சதி அம்பலமாகியுள்ளது. 2015 முதல் 2023 வரை ஸ்டீல் விலையை செயற்கையாக உயர்த்தும் நடவடிக்கைகள் நடந்துள்ளதாக, 2015 அக்டோபர் 6 இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவு மற்றும் இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தொடக்கமாக, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் தமிழக நீதிமன்றத்தில் 2021 இல் தாக்கல் செய்த மனுவில், ஸ்டீல் விநியோகத்தை குறைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி 2021 இல் 55% வரை செயற்கையாக ஸ்டீல் விலையை ஏற்றியதாக ஒப்பந்ததாரா்கள் நலச்சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த தகவலின் அடிப்படையல் நீதிபதி உத்தரவின் பேரில் இந்திய போட்டி ஆணையம் ஸ்டீல் நிறுவனங்கள் மீது விசாரணையை தொடங்கியது. விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்டீல் நிறுவனங்களின் 8 ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களை போட்டி ஆணையம் பெற்றது.
இந்த விசாரணையில் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் வாட்ஸ்ஆப் மூலம் உரையாடி சதி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2022 இல் இந்திய போட்டி ஆணையம் ஸ்டீல் நிறுவனங்களில் சோதனை நடத்தியிருந்தது.
இந்திய போட்டி ஆணையத்தின் உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் ஸ்டீல் நிறுவனங்களின் விளக்கங்கள் பெறப்பட்டு, விரிவான ஆய்வுக்குப் பின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த இறுதி விசாரணை அறிக்கையில், நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறவனங்களான டாடா ஸ்டீல், JSW,அரசின் SAIL உள்பட 25 நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து செயற்கையாக விலையை ஏற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சதியில் 25 நிறுவனங்களை சேர்ந்த 56 நிர்வாகிகள் நேரடியாக ஈடுபட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக JSW ஸ்டீல் மேலாண் இயக்குநர் சஜ்ஜன் ஜிண்டால், டாடா ஸ்டீல் சி.இ.ஓ.நரேந்திரன் உள்ளிட் முக்கிய நிர்வாகிகள் சதியில் தொடர்புடையவர்களாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோன்று, SAIL நிறுவனத்தின் 4 முன்னாள் தலைவர்களும் செயற்கை விலை ஏற்ற சதியில் ஈடுபட்டுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…


