spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் அவருக்கு நாலு மாதங்களுக்குள் ஜாமீன் கிடைக்காத நிலை உள்ளது

செந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுசட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் சில மாதங்கள் துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவருடைய ஜாமின் மனு மீதான விசாரணையில் அவர் அமைச்சராக இருப்பதால் அவருக்கு ஜாமின் வணங்கினால் சாட்சிகளை களைப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை  நீதிமன்றத்தில் வாதிட்டது.

we-r-hiring

இதனையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் 3 முறை ஜாமீன் மனுவை தாக்கல் செய்தும் அதனை ரத்து செய்து விட்டனர். இதனை அடுத்து நேற்று அவரது 41 வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமின் மனுவை ஆனந்த் வெங்கடேசன் தள்ளுபடி செய்து மூன்று மாதங்களில் விசாரணை முடிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுஅப்பொழுது நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கை 4 மாதங்களில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

MUST READ