
நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை – சாமியார் கைது
சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று (ஜூன் 28) பிற்பகல் 03.00 மணியளவில் மருத்துவமனையில் இருந்த படியே காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் ஜூலை 12- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது
14 நாட்கள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், வரும் ஜூலை 12- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், “எப்படி இருக்கிறீர்கள்” என நீதிபதி அல்லி நலம் விசாரித்தார். அதற்கு வலி இருப்பதாகப் பதிலளித்த செந்தில் பாலாஜியிடம் உடல் வலியா என கேள்வி கேட்டார்.


