Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில்பாலாஜி ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை

-

- Advertisement -

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இந்த பிணை மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்புஇல்லை என்றும் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவசரவழக்காக விசாரிக்க கோரி மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டதை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நிராகரித்தை அடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜராகி ஜாமின் மனுவை விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். அப்போது உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ரவி அறிவுறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி ரவி கருத்து தெரிவித்தார்.

MUST READ