பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்றக்கதக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில்,”கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு, இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதைத் தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் மனவுறுதியுடன் முன்வந்து போராடவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் உள்ளது. 9 பேரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்து உரிய தண்டனையும் பெற்றுத் தந்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது என தெரிவித்துள்ளாா். ”
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் – துணை முதல்வர் அறிவிப்பு…