உலகளவில் பெரிய நோய் பாதிப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதும் நடைபயணம் மேற்கொள்வதும் தான் ஒரே தீர்வு; எனவே தினந்தோறும் 5 கிலோ மீட்டராவது ஓடி நடந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்துகிறார்.

இந்திய தணிக்கை குழு சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஒவ்வொரு வருடமும் 30 வயது கடந்தவர்கள் மாஸ்டர் செக்கப் ஒன்றை செய்து கொள்வது அவசியம்.
இப்போதைய நிலையில் பெரிய நோய் பாதிப்புகள் ஏற்படுகிற சூழல் உள்ளது. உலக அளவில் நோய் பாதிப்புகள் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திருக்கிறது.
குறைந்த வயது உடையவர்கள் மாரடைப்பினால் உயிரிழக்கக்கூடிய சூழல் அதிகரித்திருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பெரிய காரணியாக விளங்குவது அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது நடைபயணம் செய்வதுதான்.
தினந்தோறும் ஐந்து அரை கிலோ மீட்டர் ஓடி நடந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 38 வருவாய் மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் திட்டம் நடைமுறையில் உள்ளது. நடப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் நடப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் செல்பி பாயிண்ட் பதாகைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.எனவே 200 பேருடன் நடப்பதற்காக தொடங்கிய இன்றைய நடைபயணம் 2000 பேர் நடப்பதாக மாறும் என்றார்.
‘சொர்க்கவாசல்’ படத்தை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது….. அனிருத்!