
இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முந்தல்முனை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மத்திய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிகாலை 05.00 மணியளவில் சங்கத்திற்கிடமான வகையில் வந்த நாட்டுப்படகைப் பிடிக்க அதிகாரிகள் முயன்ற போது, படகில் இருந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த பார்சலைக் கடலில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
“குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!
இதனையடுத்து, கடலில் வீசப்பட்ட பார்சலையும், குற்றவாளிகள் வந்த நாட்டுப்படகையும் சுங்கத்துறையினர் கைப்பற்றினர். பார்சலில் இருந்த 3,500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2.20 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. தப்பியோடியவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறையிடம் தகவல் கொடுத்த நிலையில், காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.