spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை…

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை…

-

- Advertisement -

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டாா். 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று மருத்துவா்கள் தெரிவித்த போதும், அவரைக் குறித்து தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன.முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை…தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்  கடந்த 21 ஆம் தேதி காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதனை தொடா்ந்து அவா் சென்னையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டாா். பயப்படும் அளவிற்கு பெரியளவில் பிரச்சனை ஒன்றும் இல்லை என்று டாக்டா்கள் கூறினாா்கள். மேலும், 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்றும் அவா்கள் தெரிவித்தனர். இதனால் முதலமைச்சா் பங்கு பெற வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் திருப்பூர், கோவை செல்ல இருந்த பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது.

அரசுப் பணிகள் குறித்து ஹாஸ்பிட்டலில் இருந்த படியே முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி குறித்து தலைமைச் செயலாளருடன் முதலமைச்சா் ஆலோசனை நடத்தியதோடு மட்டுமல்லாமல், சிகிச்சையில் இருந்தவாறே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற மக்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சா் உரையாடினார். லுங்கி அணிந்து கொண்டு நாற்காலியில் இயல்பாக அமர்ந்தபடி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா்.  மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. அதிகமாக மனுக்கள் வரும் பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

we-r-hiring

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்தி பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. அப்போலோ ஹாஸ்பிட்டல் தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி

MUST READ