Homeசெய்திகள்தமிழ்நாடு'கத்திரி வெயில் காலம்'- முதல் 7 நாள் அதிக வெப்பம்!

‘கத்திரி வெயில் காலம்’- முதல் 7 நாள் அதிக வெப்பம்!

-

 

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்-தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும். தமிழகத்தில் வரும் மே 06- ஆம் தேதி வரை வட உள்மாவட்டங்களில் வெப்ப நிலை நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் கரூர், ஈரோடு உள்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

கரூரில் இயல்பைவிட 7% அதிகமாக 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த 2 தினங்களுக்கு 39 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகலாம். அடுத்த 5 தினங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும். கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை

ஏப்ரல் தொடங்கி 27 நாட்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்ஸியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை அதிகரித்து காணப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ