spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

மதுரை – தூத்துக்குடி இடையே உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி - உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு நேர விபத்துக்களை தடுக்கும் வண்ணம் சாலை நடுவே செடிகள் வைக்கவில்லை, முறையாக நெடுஞ்சாலையை சீரமைக்கவில்லை என்பதுடன் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு எலியார்பத்தி சுங்கச்சாவடி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தது. இதனிடையே எலியார் பத்தி சுங்கச்சாவடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலையில் உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீது கடந்த 3ம் தேதி விசாரணையை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு சுங்கச்சாவடிகளும் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஜூன் 3ம் தேதி உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

we-r-hiring

இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஒப்பந்த படி நெடுஞ்சாலை இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை,  இரவு நேர விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. முறையாக சாலையை பராமரிக்கவில்லை, ஆனால் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு மட்டும் செயல்படுகின்றது எனவே தான் உயர்நீதிமன்றம் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டது, எனவே தடை உத்தரவை நீக்கக்கூடாது என கோரினார்.

ஆனால் அதனை ஏற்கமறுத்த நீதிபதிகள், சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனார் மேலும் மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர்மனுதாரர் பாலகிருஷ்ணன் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர்.

மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ வைரல்!

MUST READ