spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

-

- Advertisement -

 

மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
Photo: TN Govt

மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் முழு உருவ வெண்கலச்சிலையை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

we-r-hiring

“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை மாவட்டம், முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், மதுரை மாவட்ட ஆட்சியர், டி.எம்.சௌந்தரராஜனின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!

ரூபாய் 50 லட்சம் மதிப்பில் 450 கிலோ எடையில் 7 அடி உயரத்துக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ