ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.“ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி விளங்குகிறது. உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகும் ஜெர்மனி, நவீன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலிமையான பங்களிப்பை வழங்கி வருகிறது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். ஜெர்மனி மற்றும் தமிழ்நாடு இடையே பொருளாதார ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன,” என முதலமைச்சர் கூறினார்.
தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தின் தொழில்துறை இதயத்துடிப்பாக உள்ளதாக அவர் வலியுறுத்தினார். மாநிலத்தில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 54 லட்சம் எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், 60க்கும் மேற்பட்ட ஜெர்மனி நிறுவனங்கள், தங்களது தொழில் நிறுவனங்களை நிறுவ தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளன. முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர, தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளாா்.

“தமிழ்நாடு தான் இந்தியாவின் ஜெர்மனி. ‘Made in Tamil Nadu’ என்பது தரமும் திறனும் கொண்ட பெருமைக்குரிய பெயராக உருவாகியுள்ளது,” பெருமைக்குரியது என முதலமைச்சர் கூறியுள்ளாா்.