Homeசெய்திகள்தமிழ்நாடுவயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் - பூவுலகின் நண்பர்கள்

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் – பூவுலகின் நண்பர்கள்

-

- Advertisement -

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்றும் வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நிலச்சரிவு பேரிடர் வல்லுநர்களை அமர்த்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் - பூவுலகின் நண்பர்கள்

சென்னை மியூசிக் அகாடமியில் குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு(CAG) அமைப்பு சார்பில் நடைபெற்ற கால நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் செந்தில்குமார், காலநிலை மாற்றம் திட்ட இயக்குனர் ராகுல்நாத், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய செந்தில் குமார், இந்த சிஏஜி அமைப்பு கிராமப்புற வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்துள்ளது. பொதுவாக சுற்றுசூழல் தினம் அன்று ஒரு செடி நடுவோம் அதற்கு பிறகு அதனை கண்டுகொள்ளமாட்டோம் அதற்கு அடுத்த சுற்றுசூழல் தினத்தன்று மீண்டும் அதே இடத்தில் செடி நடுவோம் இவ்வாறு தான் சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் - பூவுலகின் நண்பர்கள்

ஆனால் சிஏஜி அமைப்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் சுற்றுச்சூழலை காப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றங்கள் குறித்து வாய் அளவில் மட்டுமே பேசி வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்புகளை நேரடியாக காண்கிறோம்.

தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பசுமை திட்டம் (green mission), சதுப்பு நில திட்டம் (wetland mission), கடலோர பகுதி மேலாண்மை உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி காலநிலை மாற்றத்தில் இருந்து விலங்குகளை காப்பாற்ற திட்டங்கள் நல்ல பயன்களை தருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் புலி, 8 சதவீதம் சிறுத்தையும் தமிழகத்தில் உள்ளது.

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் - பூவுலகின் நண்பர்கள்

மேலும் இந்த அமைப்பு மீண்டும் மஞ்சப்பை குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த திட்டம் எந்த அளவிற்கு மக்களை சென்று அடைந்துள்ளது, எந்த மாவட்டத்தில் அதிகம் பயன்படுத்துகின்றனர்?, எந்த மாவட்டத்தில் இந்த திட்டம் சென்று அடையவில்லை? ஏன் மக்கள் இன்னும் பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர்? உள்ளிட்ட குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கை மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என பேசினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன், கேரளா வயநாட்டில் நடந்து இந்த நிலச்சரிவு பேரிடர் தமிழ்நாட்டிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. நீலகிரி, ஏற்காடு போன்ற மலை பகுதிகளில் பெருமழை ஏற்படும் போது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு இதற்கான முன் திட்டமிடல் செய்ய வேண்டும்.

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை அமைத்து முறையான வல்லுநர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். இது போன்ற நிகழ்வு ஏற்படும் முன்னர் மக்களை எச்சரித்து பாதுகாக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை துறை என்பது பேரிடர் நிகழ்ந்த பின்னர் மக்களை மீட்டு திருமண மண்டபத்தில் வைத்து உணவளிப்பது மட்டுமல்ல, வரும் முன் காக்க வேண்டும் என தெரிவித்தார்.

MUST READ