spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள்

சிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள்

-

- Advertisement -
kadalkanni

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் திறன் பயிற்சி பெற லண்டன் செல்கின்றனா்.

சிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக முனைந்து லண்டனில் உள்ள நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும்  தரவு அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்பு திறன் பயிற்சியை முன்னெடுத்துள்ளது.

இதற்காக தமிழ்நாட்டிலுள்ள 15 பொருளியல் மற்றும் 10 கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 25 மாணவர்கள் பல்வேறு திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திறனாய்வு பயிற்சிகள் பெற்று தற்போது சிறப்பு பயிற்சிக்காக வெளிநாடு செல்வது தங்கள் வாழ்வுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனா்.

சிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள்தேர்வான 25 மாணவர்களும் லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற உள்ளனர். இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் விமான மூலம் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.மாணவர்களுக்கு உதவியாக இரண்டு பேராசிரியர்களும் சென்றுள்ளனர்.

முன்னதாக இந்த சிறப்பு பயிற்சி பெறுவதற்கு 1267 பேரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு அவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ