தமிழகத்தில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?
தமிழக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை, ஆளுநருக்கும், அரசுக்கும் இடையேயான கருத்து மோதல், நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் என தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அமைச்சர்களின் வீடுகளை அமலாக்கத்துறையினர், அதிரடி சோதனை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற, சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டுமென காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
காவாலா பாடலுக்கு அளவில்லா ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி…….. நடிகை தமன்னா!
இது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, தொழில் நிறுவன விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வாய்ப்புள்ளது.