Homeசெய்திகள்தமிழ்நாடுநாகர்கோவிலில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

நாகர்கோவிலில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

-

- Advertisement -

நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அந்த பள்ளியில் பணிபுரியும் ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில், ராமச்சந்திர சோனி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, ஆசிரியர் ராமச்சந்திர சோனியை சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.

நாகர்கோவில்

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன பேரில் உதவி ஆய்வாளர் ஆஷா ஜவகர் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

MUST READ