Homeசெய்திகள்தமிழ்நாடுபரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்...

பரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்…

-

- Advertisement -

பரப்புரையின் போது மயக்கமடைந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை நேரில் சென்று அமைச்சர் கோவி செழியன் நலம் விசாரித்துள்ளாா். பரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்...

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

வண்ணக்குடி பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை மீட்டு, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தேர்தல் களத்தில் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த தகவலை அறிந்த அமைச்சர் கோவி செழியன் தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று இளமதி சுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேய அடிப்படையில் அவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

பெய்ரூட் தாக்குதல்: லெபனான் இறையாண்மை மீறப்படக் கூடாது -சீனா எச்சரிக்கை

MUST READ