செந்தில் பாலாஜி கவனித்த துறையை கையிலெடுக்கும் முதல்வர்?
17 மணி நேர சோதனைக்கு பிறகு நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சராக இருப்பவரை கைது செய்யும்போது ஆளுநரிடமும், எம்.எல்.ஏ. என்ற முறையில் சபாநாயகரிடமும் தெரிவிக்க வேண்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது துறை வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே தமிழக மருத்துவத்துறை டாக்டர்கள் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து நாடகமாடுவதாக அமலாக்கத்துறை சந்தேகம் எழுப்புகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவா என்பதை பரிசோதிக்க எய்ம்ஸ் டாக்டர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்கு பின்னர் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து, அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு, பின்னர் சிறை செல்லும் சூழல் வந்தால், செந்தில் பாலாஜி கவனித்த துறைகளை, தானே எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேறு ஒரு அமைச்சர் வசம் ஒப்படைப்பதா என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.