Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்...வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்…வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?

-

- Advertisement -
kadalkanni

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் தமிழ் மொழியை எடுத்துப் படிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்...வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?

தமிழக அரசின் புத்துளிர் திட்டத்தின்கீழ், மாணவ தொழில்முனைவோர்களில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற போது நிகழ்ச்சியில், மாணவ தொழில் முனைவோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருது வழங்கினார். அப்போது அமைச்சரின் இளைய மகன் கவின் அமைச்சர் கையாலேயே விருது பெற்றார்.

அப்போது அமைச்சரின் மகன், மைலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள தனியார் சர்வதேசப் பள்ளியில் படித்து வருவதும் அங்கு அவர் தமிழ் மொழியை எடுத்துப் படிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியது.

விருது விழா முடிந்தபிறகு செய்தியாளர்கள், அமைச்சரின் மகனிடம் பேட்டி கண்டனர். அப்போது அவர், கணிதம் தனக்குப் பிடித்த பாடம் என்றும் மொழிப் பாடம் தனக்குக் கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மொழிப் பாடமாக தமிழை எடுக்கவில்லை என்றும் பிரெஞ்சுப் பாடத்தை எடுத்திருப்பதாகவும் பிரெஞ்சு கடினமாக இருப்பதாகவும் அமைச்சரின் மகன் கூறி உள்ளார்.

இதுதான் திராவிட மாடலா ? அரசு ஊழியரான தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகனே, அரசுப் பள்ளியிலோ, அரசு பாடத்திட்டத்திலோ படிக்காமல், சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். அத்துடன் தமிழை இரண்டாவது மொழியாகக் கூடப் படிக்காமல் பிரெஞ்சு மொழியை எடுத்துப் படித்து வருகிறார் என்று எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இதுகுறித்து வரும் விமர்சனங்கள்:

திமுக அரசு, தமிழ் மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்கிறது. இந்தி மொழியை எதிர்கிறது. ஏழை மாணவர்களை தமிழ் படிக்கச் சொல்லும் திமுக ஏன் தனது குழந்தைகளுக்கு சொல்வதில்லை? குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தமிழ் அல்லாமல் வேறு மொழி படிக்கச் செய்வார்கள். இந்தி கற்பிக்கும் பள்ளியை நடத்துவார்கள்.

இதுதான் திராவிட மாடல் அரசின் சமூக நீதியா?’’ என்று விமர்சனம் வருகின்றனர்.

பின்னார் மாணவரும் அமைச்சரின் மகனுமான கவினிடம் செய்தியாளர் புராஜெக்ட் குறித்து கேட்ட போது, , ’’நான் இதைச் செய்யவில்லை. என் சக நண்பர்களின் திட்டம் இது. நான் புராஜெக்ட்டில் அவ்வளவாக எதையும் செய்யவில்லை. நேற்றுதான் இந்த புராஜெக்ட் குறித்துத் தெரிந்தது. அதனால் பெரிதாக மகிழ்ச்சி எதுவும் இல்லை’’ என்று மாணவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் மகன் என்பதால், ’’விருது விழாவில் அந்த செயல்திட்டம் திடீரெனச் சேர்க்கப்பட்டதா? அமைச்சர் மகன் புதிதாக சேர்க்கப்பட்டாரா?’’ என்றும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு விசுவாசியாக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

MUST READ