Homeசெய்திகள்தமிழ்நாடுதென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்!

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்!

-

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்!

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடல் சீற்றம் தீவிரமாக இருக்கும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடல் அலை சீற்றத்துக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு கடல் கொந்தளிப்புக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அலை சீற்றத்தால் படகை பாதுகாப்பாக நிறுத்தி, எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1.8 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பலாம் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16 முதல் 23 நொடிகளில் ஒரு அலை பின் மற்றொரு அலை எழும்பும் வாய்ப்புள்ளது.

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் சில நிமிடங்களில் ஏற்படும் பலத்த காற்றின் விளைவு தான் கடல் கொந்தளிப்புக்கு காரணம். பலத்த காற்றின் விளைவை ‘கல்லக்கடல்’ என்று அழைக்கப்படுகிறது. கடல் கொந்தளிப்பு நாளை (மே 05) இரவு 11.30 மணி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

MUST READ