spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிரையரங்கில் அனுமதி மறுப்பு என நாடோடி பழங்குடியினர் பேசும் வீடியோ!

திரையரங்கில் அனுமதி மறுப்பு என நாடோடி பழங்குடியினர் பேசும் வீடியோ!

-

- Advertisement -

 

திரையரங்கில் அனுமதி மறுப்பு என நாடோடி பழங்குடியினர் பேசும் வீடியோ!
Video Crop Image

கோவை மாவட்டத்தில் நாடோடி பழங்குடியினருக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், பிற்பகல் காட்சியில் படம் பார்க்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

we-r-hiring

ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கோவை மாவட்டம், போத்தனூரில் உள்ள திரையரங்கிற்கு படம் பார்ப்பதற்காக, நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த 30- க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தனர். ஆனால், டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால், மாலை நேர காட்சிக்கு வருமாறு திரையரங்கப் பணியாளர்கள் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த நாடோடி பழங்குடியினர் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட திரையரங்கம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பதாலேயே, நாடோடி பழங்குடியினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது விசாரணையில் உறுதியானது.

“13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில், இரவு நேர காட்சிக்கு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு நாடோடி பழங்குடியினர் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

MUST READ