ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கெனவே கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளாா். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று அரசும், மனுதாரரும் விளக்கம் தர வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் மானியமாகவோ, இலவசமாகவோ நாப்பின்கள் வழங்க உத்தரவிட கோாிய மனுவின் மீது, தாம்பரத்ததை சோ்ந்த வழக்கறிஞா் லட்சுமி ராஜா தொடா்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு உயா்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
100 நாள் வேலைத் திட்டம்…11 ஆண்டுகளாக சீர் குலைக்கும் முயற்சியில் பாஜக – செல்வப் பெருந்தகை



